மீண்டும் வருவாயா காதலனே
புற அழகெல்லாம்
அழகல்ல அழகா..
உன் அக அழகைவிட
எனக்கென்ன வேறெதுவும் பெரிதா?..
கண்களால் பேசியே கவிழ்க்கவில்லை உன்னை...
மனம் விட்டு பேசியே
காதலித்தோம் என்பது தானே உண்மை...
வீண் சந்தேகம்
கொண்டாயாட என்னை....
உன் தோற்றம் பிடிக்கவில்லை
என்று உன்னையே குறை சொன்னாய் என்பது தான் உண்மை...
உன் நேசம் மட்டும்
தானே நேசித்தேன் ....
அதையே தான்
என் உயிர்
மூச்சாய் சுவாசித்தேன்..
காதல்
சாதி, மதம், பேதம்
மட்டும் அல்ல
தேகமும் பார்க்காதடா...
இதுவும் உண்மை...
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சுச்சாம்..
காதலிக்கு
காதலன் தான் மன்னவனாம்...
தாயுள்ளம் கொண்டதடா
பெண்மை...
காதலனே..
என்னை மட்டும்
ஏற்க மறுப்பது தான் ஏனோ?..
உனக்கு மட்டும்
ஏனடா என் காதல் புரியவில்லை?
தமிழ் நாட்டுப் பெண்ணடா நான்..
மீண்டும் வருவாயா காதலனே...
காத்திருப்பேன் உனக்காக காதலுடன்...