கிணற்றுத்தவளை

வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு
----- விட்டில்பூச்சிப் போன்றேதன்னைப்
பூட்டிவைத்துக் கொள்கின்றாய் !
------ பூமிக்குமே பாரமானாய் !


ஏட்டுச்சுரக்காய் வேண்டாமினி !
------ எத்திக்கும்நீ வெளியுலகம்பார் !
காட்டுஉன்றன் வீரத்தைக்
------ காணத்துடிக்கிறோம் மக்கள்வெள்ளம் !!


வாட்டுகின்றதோர் வாழ்க்கையிலே
------ வாழ்ந்தும்தான் என்னபயன் ?
மாட்டுத்தொழுவத்தில் அடைபட்ட
------ மானிடா நீ புரிந்துகொள்வாய் !!!


ஆட்டுவிக்கின்ற அரசாங்கத்தை
------ ஆளவந்தவன் நீயல்லவோ !
கேட்டுத்தெளிக ! கிணற்றுத்தவளையெனக்
------ கேட்போர்சொல்லல் தகுமோஇஃதே !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Feb-17, 7:43 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 88

மேலே