என்னவன் எழுத்து ❤
கண்ட நாள் முதல் - உன்னை நினைக்காத நாளில்லை ..
காலங்கள் கடந்தன
அன்பும் பெருகின
என்னுள் புகுந்தால் - அவள்
எனக்கென பிறந்தால்
கண்களால் இதயத்தை கட்டியவள் - அவள் பார்வையில் உள்ளத்தை வெட்டியவள்
சிரிப்பினில் சிதைப்பவள் - அவள்
சிந்திக்கும் யுக்தியுடையவள்
சோம்பலை முறிப்பவள் - அவள்
சிறுவாண்டு போல் திரிபவள்
கோபத்தில் தெறிப்பவள்- அவள்
பொறுமையில் திகைப்பவள்
எளிமையில் ஜொலிப்பவள்- அவள் ஆடம்பரம் ஏற்பவள்
வெற்றிக்கு வித்திடுபவள் - அவள்
விதியை வெல்பவள்
ஜெயம் கொண்டவள் - அவள்
ஏழு பிறப்பிலும் என் கைகோற்பவள் ❤
_அவன் எழுதியது
: கிறுக்கி