தமிழகம்
திசைகள் நான்கும் திருடர்கள் கூட்டம்
சூழ்ந்து தாக்கும் தீவானது!
அதிகார போதையினர் காலில் மிதிபட்டு
அழகு குலைந்த பூவானது!
ஊழலால் பிழைக்கும் உயிரினங்கள்
உரிமையுடன் உலவும் காடானது!
எதிர்காலம் எண்ணி அஞ்சி சாவதே
மக்கள் எங்கள் வாழ்வானது!