சாபம் - சபதம்

இதோ பாடுகிறேன் ஒரு பாட்டு...
உள்ளிருந்து கேட்கும் குரலின் வெளிப்பாடு....
உண்மை உணருங்கள் அப்பாட்டைக் கேட்டு....

சத்தியத்தைக் கூறுங்கள்,
நீங்களத்தனை பேரும் மனிதர்கள் தானா? சொல்லுங்கள்....

நாளும் உழைப்பவன் அத்தியாவசியத்தைப் பெற தவிக்கிறான்....
மக்களுக்காக உழைப்பேனென்றுக் கூறி கட்சி அமைத்தே ஆட்சியமைத்தவனெல்லாம் குளுகுளு அறையில், குளுகுளு ஊர்தியில், நித்தமொரு புதிய ஆடையோடு களிப்போடு, மது போதையில் ஆடம்பர வாழ்வே வாழ்கிறான்....

என்னங்கடா உங்களுடைய சமுதாயம்??
என்னங்கடா உங்களுடைய லட்சியம்???
என்னங்கடா உங்களுடைய கொள்கை????

பிணந்தின்னி கழுகாய் பணத்தையே குறிவைத்து வாழும் குருடர்களே,
பதில் சொல்லுங்களே....

எண்ணத்திற்கு ஒரு சக்தியுண்டெனில்,
தமிழ் எழுத்திற்கு ஒரு சக்தியுண்டெனில்
நல்லவர் போல் நடித்து கயமையைச் செயலாக்கும் கயவரெல்லாம் கனலுக்கிரையாகி விடுவார்களாக....

தனக்கென்றால் தனித்தீர்ப்பு வேண்டுமென எண்ணுபவன் எவனும் கயவனுள் கலந்தவனே....

பணம் தான் அதிகாரமென்றால், சக்தியென்றால் பணமில்லாத யாவரும் ஒன்று கூடியே இறைவனிடம் நீதி கேட்போம்...
தனியொரு உலகம் கேட்போம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Feb-17, 10:55 pm)
பார்வை : 658

மேலே