குழப்பம் - குறுங்கவிதை
குழப்பத்தில் இருக்கின்றேன்
குமுருகின்றேன் நீயின்றி .
பழகிவிட்டேன் என்செய்வேன் .
பரிதவிக்கும் என்னிதயம் .
உள்ளம் முழுதும் நீயே
உருவாய் கருவாய் இருகின்றாய் !
கள்ளம் இல்லை என்னிடமே !
காதலுள்ளம் என்னுள்ளம் !
விலகியும் போகாதே !
வீணாகும் என்னிளமை
பலரின் கண்பட்டு விடும்
பாராமுகமும் ஏனோ !
வாராயோ என்னருகில்
வந்துவிடு விரைந்துமே
பாராமல் இருந்திடவும்
பாவிநான் முடியவில்லை !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்