சேகரிப்புகள்
இதோ தொடங்கிவிட்டேன் உன் சேகரிப்புகளாய்
நீ தவறவிட்ட கைகுட்டை
நீ தூக்கி எறிந்த பயண சீட்டு
உன் நெற்றியில் இருந்து விழுந்த ஸ்டிக்கர் பொட்டு
உன் கைகளை சிவப்பாக்கி உதிர்ந்த மருதாணி
உன் கூந்தலில் இடம் பிடித்து உதிர்ந்த ரோஜா
இவை யாவும் சேகரிக்கிறேன்
நிரந்தரமாய் உன் மனதில் இடம் பிடிக்க