நினைவுகளின் கைப்பாவை

என்னுள் எவ்வளவோ குழப்பங்கள்
எனைவருடும் உணர்வொன்று
எந்தன் நினைவுகளை உரசிவிட
என்னை நான் தனிமையாக்கினேன்.
துன்பங்களைத் தொலைவாக துரத்திவிட்டு
குழப்பங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டு
என்னுள் இதமான இனிமைகள் விதைத்திட்டு
இயல்களைத் தந்தது அவ்உணர்வு.
ஏதோஒரு சலனம் என்னுள் தோன்ற எட்டிப்பார்த்தால்
என்முன்னே அந்த உணர்வுகளின் உருவம்!
எனைக்காணப் பிடிக்காமல் தலைதிரும்பி
புருவங்கள் சுருங்கி காணாததுபோல் கடந்து சென்றது.
இது ஒன்றும் புதிதல்ல! இருந்தும்!
என்னுள் இருக்கும்அவளை
மலர்போல் புன்னகைக்க வைத்தேன்!
அவள்இமைகளை எனை நோக்கி
இதமாய் இமைத்திட வைத்தேன்!
அவள் கூந்தலை கலைத்திட்டு
காற்றிலே தவழ்ந்திடவிட்டேன்!
மண்ணிலே நடக்கவிட்டு
கொலுசுகளை இசைத்திட வைத்தேன்!
இப்படி எத்தனையோ செய்யவைத்து
என் நினைவுகளின் கைப்பாவையக்கினேன்
எனைப் பார்க்கப் பிடிக்காமல்
பரிதவிக்கவிட்டுச் சென்ற அவளை!