முன்னேறி வா

" பல்லில் விஷம் நிறைந்த பாம்பு புடலங்காயாகவே காட்சியளிக்க,
புடலங்காய் என்று தொட்டவனை தீண்டித்தான் சிரிக்குதம்மா....
விஷம் ஏறுமோ?..
உடல் முழுவதும் எப்போ ஏறுமோ???...
அகால மரணம் தான் சீக்கிரம் வருமோ??....

தன்னம்பிக்கையற்றுப் போன வாழ்க்கையிலே எதன் பேரில் தான் நம்பிக்கை கொள்ளுவதோ??? ", என்றே நாள் தோறும் புலம்பும் நெஞ்சே,
உன்மீது நம்பிக்கை கொண்டே முன்னேறி வா....

உன்னை கடித்தது பாம்பல்ல...
சிறு புழு தான்...
விசம் உன்னை தீண்டாதே, பயமென்னும் விஷம் உன் மனதில் இல்லாவிடில்.....

உணவு ஊட்டிவிட அன்னையைத் தேடிக் கலங்காதே, உன்னிடம் இரண்டு கைகளிருக்கையிலே....
பணம் வேண்டி தந்தையை நாடாதே, உனது உடலில் உழைக்கும் தெம்பு இருக்கையிலே....

உன்னைச் சுற்றி வசிப்பதெல்லாம் விஷம் நிறைந்த மனங்களடா....
அவர்களின் உதவியிலே விஷமம் இருக்குதடா....
உடை கண்டு, பணம் கண்டு, மாடிவீடு கண்டு ஆளையும் மதிக்குதடா.....
உண்மையில் அவர்களிடம் ஆன்ம நேசம் இல்லையடா.....

புறப்பட்டு போகுதடா உலகமென்னும் ஆட்டுமந்தை, எக்குழியில் வீழ்ந்து புதையவோ???....

அறிவியலின் கண்டுபிடிப்பெல்லாம் வியாபாரமென்றாகி விட்டபின் எங்குடா தரமானதாக இருக்கப்போகிறது???...

சுயநலமே மேலோங்கிய உலகில் பொதுநலமென்பதே மேடை விளம்பர பேச்சாகிப் போனதடா....
காவி உடைகளும் ஏமாற்றுதடா....
சந்நியாசமும் வியாபாரமாகி போனதடா....

எல்லாமே வியாபாரம் என்று ஆனதடா....
அவற்றையெல்லாம் கண்டு பெரிய மலைகளென்று எண்ணி அஞ்சி நடுங்காதே....
அலறி புலம்பாதே.....
உனது மனதின் வழியில் ஆத்ம விசுவாசத்தோடு முன்னேறி வா.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Feb-17, 11:10 am)
Tanglish : munneri vaa
பார்வை : 2758

மேலே