கருவறை இரகசியம் - குறுங்கவிதை

கருவறை இரகசியம் !!!


தலைவனின் விந்துடனே
தலைவியின் கருமுட்டை
இணைதலுமே இரகசியமே !
அகத்தினைப் பேணுதலும்
அன்பினாலே ஆளுதலும்
பத்துமாதம் சுகமாகச்
சுமந்திடுவாள் பத்தினியாம்
மறுப்பதுண்டோ சொல்வீர்கள் !
அழகான அமைதியிடம்
உள்புகுந்து விளையாட
யாருமில்லை என்றாலும்
உறவாகுமே கருவறையும் !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-17, 11:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 75

மேலே