எதுக்கு இந்த வாழ்வய்யா

என்ன புழைப்பு இதுவய்யா
எதுக்கு இந்த வாழ்வய்யா......

வறுமையோடு வாட்டமும்
வாழ்வில் இன்னும் தொலையல.
வானம் மழையைப் பெய்யல
வசந்த காற்று வீசல
கானம் பாடும் குயிலுக்கும்
காட்டு மரங்கள் தழைக்கல.....

துயரம் இங்கு மடியல
தேசம் தூய்மை ஆகல
வயலெதுவும் விளையல
வயிற்றெரிச்சல் தீரல
வாழும் வழியும் தெரியல
வதங்கி கிடக்கோம் நாட்டில.....

பணத்துக்காகப் போராட்டம்
தெருவெல்லாம் ஆர்ப்பாட்டம்
நீண்டுபோகும் வரிசையால்
மாண்டு போனோர் கணக்கில
மூண்ட குழப்பம் தீரலை
மூச்சு விட முடியலை.....

உழைத்த கூலி கிடைக்கல
உப்பு வாங்க காசில்ல
ஏழை பசியும் அடங்கல
ஏற்றம் இன்னும் கிடைக்கல
படிச்சும் வேலை கிடைக்கல
பையில் காசு தங்கல.....

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (1-Mar-17, 8:16 pm)
பார்வை : 88

மேலே