நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

பள்ளிகாலத்து பால்ய நண்பனே ..
பாசம் கொண்ட நேசமான நட்பே
வேஷம் இல்லா வெகுளி நண்பனே
இன்முகம் காட்டும் இனிய நட்பே
இல்லை என சொல்லாத ஈகை நட்பே
உண்மை நட்பின் உன்னதமானவனே
உலக நட்புக்கெல்லாம் உதாரணமானவனே
சாதி பார்க்காத சமத்துவ நண்பனே
சண்டையே போடாத சமாதான தோழனே
தோல்வியால் துவண்ட நண்பனுக்கு தோள்கொடுக்கும் தோழமையே
கல்லூரி காலம் முதல் கணினி காலம் வரை நட்பை மறக்காத சிரித்த முக சினேகிதனே
கடையேழு வள்ளல் என்பதை உனைசேர்த்து எட்டாக்கலாம் என் தோழைமையே
நாளெல்லாம் நன்நாளாய் நலம் பெற்று ...நலம் வாழ இறைவனிடம் வேண்டி

"இனிய பிறந்த நாள்" வாழ்த்துக்கள்

" மகிழ்ச்சி "
நன்றி வாழ்க வளர்க...இப்படிக்கு ..வீ .முத்துப்பாண்டி


Close (X)

0 (0)
  

மேலே