அரசியல் வாதிகள்
அருமை என்பார்,
பெருமை என்பார்,
திறமை என்றால் என்ன என்பார்,
பொறுமை என்பது என்றும் அறியார்,
சிறுமை செயல் மறவாமல் செய்வார்,
வறுமை என்றால் தள்ளி நிற்பார்,
வெறுமை காட்டுவதில் முன் நிற்பார்,
கயமை என்பது நாளும் கொள்வார்,
கருணை என்றும் நினையார்,
நேர்மை செயலாற்ற விலை கேட்பார்
கடுமை நாளும் பழகும் விதமாகும்
கடமை கொடுத்து வாங்கும் பொருளாகும்
தூய்மை படத்தில் பார்க்கும் கனவாகும்
தீமை என்றும் மனதின் கருவாகும்,
கூர்மை பேசும் வார்த்தையின் முடிவாகும்,
உண்மை என்பது அறியாச் சொல்லாகும்
கொடுமை நாளும் செய்யும் செயலாகும்,
பொறாமை மனதிடை குணமாகும்,
இனிமை என்றும் அறியாச் சொல்லாகும்,
தனிமை நாளை இவர் சேரும் இடமாகும்.
இவை எல்லாமே இன்றைய அரசியல் வாதிகளின்
சிறப்புக் குணங்களாகும்.