கல்லறை புகப்போகும் ஞானம்
ஏன்/எப்படி?
இப்படி ஒரு
முடிவெடுத்தேன்,
யார்/எது?
இப்படி என்னை
செய்யத்தூண்டியது,
ஏதேதோ தோனுது
இப்பொழுது!
இதுவரை யாருக்கும்
எதுவும் செய்யவில்லை
இனிமேல் அதற்கு
சாத்தியமுமில்லை,
கரிக்கட்டையாக
இன்னும் சிறிது
நேரத்தில்,
கடைசி நிமிடத்தில்
தான்
எனக்கு புரிந்தது!
மீண்டும் ஒரு வாய்ப்பு,
எனக்கில்லையென்று
கல்லறை புகப்போகும்
காலம் கடந்த ஞானம்
என்ன செய்ய?
#sof_sekar