என் கடைசி பிரயாணம்

வாழ்வை
அகம் புறம் என வகைப்படுத்தின தமிழன் எங்கே !

பாரின்
கிழக்கே கதிரவன் புலர்ந்திட
வயலை நோக்கி ஏர்முனை தூக்கிய தமிழன்
எங்கே !

நெஞ்சிலே
சுரம் துளிர்ந்த நெற்றி வியர்வையிலே வாடலை உணராது உழைத்த தமிழன்
எங்கே !

ஆயர் பாடியினிலே
அரவம் வளர்த்து கர்வம் தவிர்த்த தமிழன்
எங்கே !

மணக்கோலம்
சூட மங்கையை மனம் கவர்ந்திட ஏறுதழுவுதல் நடத்தி வீறு நடைப்போட்ட வீரத்தமிழன்
எங்கே !

ஆண்டையர்
கூட்டமெல்லாம் அடித்து விரட்டி அமுது படைத்து அரச விழா எடுத்த ஆதி தமிழன்
எங்கே !

வானத்தை
விஞ்சி நிற்க்கும் கூட்டமன்றோ நாம் என்று எதிரியை எள்ளி நகையாடிய தமிழன்
எங்கே !

வீரமும் விவேகமும்
இரு கண்களென போற்றிய
வெள்ளை மனம் கொண்ட கறுப்புத்தமிழன்
எங்கே !

நாண்கடி
சுவரினுள் நின்று நயவஞ்சகம் செய்யும் நரிக்கூட்டத்திற்க்கு எதிரான போர்வாள் எங்கே தமிழா

நின்ற
போர்க்களத்தில் நெடிய மதில் திமிர்ந்த திமிலுடன் அழகு ஆடவரை வீரரன் என அடையாளப்படுத்திய தலைவனே தலை வணங்கிய தமிழன் தலை குனிந்து விடை கேட்கிறான்

கேட்டதிற்க்கு
விடை கிடைத்த பாடில்லை
விடியலும் விடை கொடுத்த பாடில்லை
பாசுரம் பாடும் பராளுமன்றமோ அடிப்பனிந்த பாடில்லை !

விடியட்டும் காலை
நானே விடை தருகிறேன் காளை !

உறங்கியது
போதும் என உயிர் அறும் வேளையிலே ஊசலாடிக்கொண்டிருக்கும் உழவனின் உரிமை

இன்னொருவன் சாவதில்லை இவ்வையத்து தமிழன் உரிமைக்காக நான் ஒன்றே போதும்

வீறு கொண்டு போ காளை
நாளை.உன்னோடு மைதானத்திலே தூசோடு கலந்திட்ட சாம்பலாய் நான் உன் திமிலோடு பிரயாணிப்பேன் !

எழுதியவர் : சிவா சுந்தர் (6-Mar-17, 8:34 pm)
சேர்த்தது : Shiva Sundar
Tanglish : en kadasi prayaanam
பார்வை : 196

மேலே