படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

இரை கொடுத்து வளர்க்கும்
வளர்ந்ததும் தள்ளிவிடும்
பறத்தலுக்கான பயிற்சி !

தன்னுடைய எல்லாக் குஞ்சும்
பொன் குஞ்சுதான்
குருவிக்கு !

உலகில் நிகர்
வேறுன்றுமில்லை
தாயன்பு !

பசியோடு இருந்தாலும்
பசியாற்ற மகிழும்
உன்னத உறவு தாய் !

வேண்டாம் போட்டி
எல்லோருக்கும் உண்டு
ஊட்டி மகிழும் தாய் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Mar-17, 4:57 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே