புதிய கண்டம் - ஸிலாண்டியா
நாம் வாழும் உலகத்தில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளது. அவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப், ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா என்பது நாம் அறிந்ததே.
ஆனால் அதில் புதிதாக இன்னொரு கண்டம் இணைந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அது உண்மை தான். ஆராய்ச்சியாளர்கள் அது புது கண்டம் என்று கூறுகிறார்கள்.
அந்த கண்டத்திற்கு ஸிலாண்டியா(zealandia) என்று பெயர் வைத்துள்ளனர். ஏனென்றால் அது நியூ ஸிலந்து(New Zealand) அருகில் உள்ளது. கடலுக்கு அடியில் இருந்து அது மேலே வந்துள்ளது.
ஸிலாண்டியாவின் அளவு பாதி ஆஸ்திரேலியாக்கு சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதில் சிறிது அளவு மட்டுமே கடலுக்கு மேல் வந்துள்ளது மீதி பகுதி கடலுக்கு அடியிலே இருக்கிறது.
ஸிலாண்டியா 100 மில்லியன் வருடங்களுக்கு முன் அண்டார்டிக்காவில் இருந்து பிரிந்து வந்திருக்கிறது என்றும். 80 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அது கடலுக்கு அடியில் சென்று விட்டதால் யாராலும் கண்டுபிடிக்க வில்லை என்கிறார்கள்.
ஸிலாண்டியா ஒரு சாதாரணமான நிலத்தை போல் தான் இருக்கிறது என்றும் அங்கும் மலைத்தொடர்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.
வடக்கு ஸிலாண்டியாவில் எரிமலை இருக்கிறது என்று மற்ற இடத்தில அங்கு சாதாரணமான வெப்பநிலை காணப்படுகிறது என்கிறார்கள்.
ஸிலாண்டியாவில் அங்குள்ள தீவுகளையும் இணைத்துள்ளார்கள். அதாவது அங்குள்ள நியூஸிலந்து, நியூ காலந்தோணியா, நார்போக், லார்ட் ஹோஈ ஆகிய தீவுகளை இணைத்துள்ளார்கள். அந்த தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள அரசாங்கம் ஸிலாண்டியாவை சுற்றுலா தலமாக பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. மக்களும் புதிய கண்டம் எப்படி இருக்கிறது என்று காண அங்கு சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதுப்போல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கடலில் முழுகிய நம் குமரிக்கண்டம் மீண்டும் வெளியே வருமா என்று எதிர்பார்க்க படுகிறது.
அப்படி நடப்பதற்கு இன்னும் பல நூறு வருடங்கள் கூட ஆகலாம்.