பெண்
பெண் என்பவள் அதிசயமானவள்!
பிறப்பின் உண்மை தெரிந்தவளும் அவளே!
உறவுகளுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்வதில்
அந்த பச்சோந்தியையும் மிஞ்சிடுவாள் அவள்!
சில உண்மையான ஆண்மகன்களுக்கு மட்டுமே
அவள் ஒரு பெண்ணாக தெரிகிறாள்
பல காமக்கொடூரர்களுக்கு காமப்பசியின்
உணவாகவே தெரிகிறாள் அதனால்தான்
அவள் எந்த வயதிலும் சூறையாடப்படுகிறாள்
ஒரு நல்ல ஆண்மகன் தன தேடலை
ஒரு பெண்ணிடத்திலிருந்துதான் தொடங்குகிறான்
அந்த தேடலின் முதல் பிம்பமாக
தெரிந்தவள் தான் அவனின் தாய்
அவளும் ஒரு பெண் தானே !
அவனின் இரண்டாவது பாச பிம்பமாய்
தெரிந்தவள் அவனுடன் பிறந்தவள்
அவளும் ஒரு பெண் தானே !
அவனின் அன்பினை பகிர்ந்து
கொள்ளும் பிம்பமாய் தோன்றியவள்
தான் அவனின் காதலி
அவளும் ஒரு பெண் தானே!
அவனின் சுக துக்கத்தை பகிர்ந்துக்கொள்ளும்
ஒரு பிம்பமாய் தோன்றியவள் தான்
அவனின் மனைவியானவள்
அவளும் ஒரு பெண் தானே!
அவனின் மீசையை திருகி அவனின்
மொத்த பாசத்தையும் தனக்கென
உரிமைகோரும் ஒரு பிம்பமாய்
தோன்றியவள் தான் அவனின் மகள்
அவளும் ஒரு பெண் தானே !
அவனின் முதுமையில் அவன்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும்
ஒரு பிம்பமாய் தோன்றியவள் தான்
அவனின் பேத்தியானவள்
அவளும் ஒரு பெண் தானே!
இவ்வாறு உன் வாழ்வின் எந்த
நிலையிலும் இன்றியமையாதவளை
இருக்கும் அவளை நீ சூறையாடும்போது
இவர்களில் எந்த பெண்ணும் உன்
கண் முன் தோன்றவில்லையா கொடுரனே !
ஏனனில் நீ சூறையாடிய அவளும்
ஒரு பெண் தானே கொடுரனே!