எது வாழ்க்கை

நிறையையும் குறையையும் நிறைப்பதா வாழ்க்கை?
நிம்மதியின் நிரந்தரத்தை நிறைப்பதே வாழ்க்கை.
உதாசீனத்தையும்,உளறலையும் உள்வாங்குவதா வாழ்க்கை?
உறவுகளையும்,உயிர்களையும் உயர்த்துவதே வாழ்க்கை,
செல்வத்தையும்,செல்வாக்கையும் சேர்ப்பதா வாழ்க்கை?
செல்லும்பொழுது சிலர் கண்ணிலாவது
சொட்டுக்கண்ணீர் சேர்ப்பதே வாழ்க்கை.
கவலையும்,கண்ணீரும் கலந்ததா வாழ்க்கை?
கடமையும்,கண்ணியமும் காப்பதே வாழ்க்கை.
போற்றுதலும்,தூற்றுதலும் பெறுவதா வாழ்க்கை?
பொறுமையின் பொக்கிஷத்தை புரிவதே வாழ்க்கை.
கூடலும்,ஊடலும் கலந்ததா வாழ்க்கை?
பாசமும்,நேசமும் படர்வதே வாழ்க்கை.
பிள்ளைகளுக்கு
வசதியையும்,வாய்ப்புகளையும் தருவதா வாழ்க்கை?
தன்னம்பிக்கையும்,தைரியமும் தருவதே வாழ்க்கை.
புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் பெறுவதா வாழ்க்கை?
புரிதல்களை பெறுவதே வாழ்க்கை.
இன்பங்களையும்,துன்பங்களையும் கடப்பதா வாழ்க்கை?
அதனுடன் இணக்கம் அடைவதே வாழ்க்கை.
மதிப்பும்,மரியாதையும்,மானமும்,மாவீரமும்,
அனைத்திலும் உன்னதமான அன்பையும்!!!!
உயிர்கள் உள்ளனவும் உணர்த்திவிட்டுச்
செல்வதே வாழ்க்கை.

எழுதியவர் : வெங்கடேஷ் (17-Mar-17, 11:40 am)
பார்வை : 178

மேலே