நான் செய்த பாவம் என்ன
பையில் உருவாகி
பையில் வளர்ந்து
பைய்ய பைய்ய
நகர்ந்து
பாழும் இவ்வுலகை
காண விழைந்த
என் ஆசையையும்
சேர்த்து மீண்டும்
எனை ஒரு
பையில் அடைத்து
வேண்டாம் என்று
குப்பையில் வீச
நான் செய்த
பாவம்,
தான் என்ன?
#sof_sekar