நன்றியா…

வாலிபம் என்பது
விளையாட்டுக் களம்தான்,
விளையாட்டு வினையாகாதவரை..

சரித்திரம் படைப்பது
சாதனைதான்,
சறுக்கல் வராதவரை..

பாதுகாப்பு ஏதுமின்றி
பனைமரத்தில் ஏறி,
பலரும் பார்க்கத்
தன்படம் எடுக்கையில்
தவறி வீழ்ந்தால்,
உன்படம் வருமே
கறுப்புக் கட்டத்தில்..

கதறும் பெற்றோரைக்
காணநீ இல்லாமல்போவதா
காட்டும் நன்றி…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-17, 7:31 pm)
பார்வை : 83

மேலே