நாக தேவதை

கருங்கல்லில் சமைத்த நாகங்கள்
அவற்றிற்கு மஞ்சள் பூசி,சந்தனம் இட்டு
குங்கும பொட்டும் வைத்து,ஆடை உடுத்தி
நாகதேவதை என்றும் அழைத்து
மண்ணில் வீழ்ந்து வீழ்ந்து சேவித்து
கும்பிடும் விந்தைமிகு மானிடர்கள்
அந்த நாகமே உயிர்கொண்டு கண்முன்னே
படமெடுத்து ஆடி நடை பாதையில் தென்பட்டால்
அதை தெய்வமாய் எண்ணி விட்டுவிடுவாரா
இல்லை கழி கொண்டு தாக்கி கொன்றுவிடுவாரா

நம்மையும், அந்த நாகத்தையும் படைத்தோன்
பாதம் நாடி தஞ்சம் அடைந்தால்
பயத்தால் நாகத்தை வணங்கி பின்
பயத்தால் அதை நேரில் கண்டபோது தாக்குவதும்
தவிர்த்திடலாமே, சிந்தித்தால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-17, 9:21 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே