பிறக்கும் போதும் அழுகின்றான்

பிறக்கும் போதும் அழுகின்றான்
இறக்கும் போதும் அழுகின்றான்
ஒரு நாளேனும் கவலை யில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே!...

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!...

இயற்கை சிரிக்கும் அன்னையின் கையில் ஆடுவதின்பம் கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையிலின்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்!...

பெரும் பேரின்பம்!...


படம் : கவலை இல்லாத மனிதன்
எழுதியவர் : கண்ணதாசன்

எழுதியவர் : (22-Mar-17, 1:56 pm)
பார்வை : 154

மேலே