உண்மையான குருவின் அளவுகோல்கள்
தன்னை நாடி வருபவர்களுக்குப்
பிடித்ததை மட்டுமே சொல்லி
மகிழ்விக்கும் மனப்போக்கு
உண்மையான குருவிடம் இருக்காது.
உண்மை கசந்தாலும்
அதை மருந்தாக உட்கொள்ள வைத்து
நலமடையச் செய்யும் மகத்தான
அக்கறை அவரிடம் இருக்கும்.
தன்னைப் பின்பற்றுவோரின்
எண்ணிக்கையில் அவருக்கு
அக்கறை இருக்காது.
ஒருவர் பின்பற்றிநாளும்
அவர் தன்னை போல மிக
பெரிய ஞானம் பெற உதவுவார்.
சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது,
சித்துவித்தைகள் செய்து காட்டுவது
போன்றவை உண்மையான
குருவிடம் இருக்காது.
ஞானத்தைப் பரப்ப வேண்டும்
என்ற நோக்கம் மட்டுமல்லாமல்
ஒரு உதாரண புருஷராய்
அவர் வாழ்ந்து காட்டும்
பண்பு இருக்கும்.
உண்மையான குரு தன்னிடம்
வந்த அனைவரும் குருவாக
வேண்டும் என்பதிலே
கவனமாக இருப்பார்
இதெல்லாம் உண்மையான
குருவை அடையாளம்
காண நமக்கு இருக்கும்
இன்றைய அளவுகோல்கள் !!!