வெற்றிலையே
வாடாத இளம்பச்சை வெற்றிலையே
உன் மனசை நான்
இன்னும் தொடலையே
மெல்லுதடி ஊர் நாக்கு
கொல்லுதடி உன் போக்கு
கும்பகோண வெற்றிலையே
குடம் கொண்டு போகையில
மனசை கொண்டு போனாயே
பீடா வெற்றிலையா
பேஷா நீ இருக்க
வாடிய வெத்தலையா
பெட்டிக் கடையில நானிருக்கேன்
பச்சைக்கொடி காட்டு புள்ள
பத்திரமா வெச்சிருப்பேன்
உதடு செவக்க ஒண்ணு கொடு
வெற்றிலை பாக்கு மாத்திடலாம்!