பேசாத நேரம் எல்லாம்
பேசாத நேரம் எல்லாம்
தனியாக பேசிக்கொண்டு
எனோ நானும் இங்கு
பைத்தியம் ஆகி போனேன்………
காணாத காட்சி ஒன்று
கண்கள் மூடி பார்த்து கொண்டு
ஆகா இது தான் காதல் என்று சொன்னேன்……
அடங்கி கிடந்த வெட்கம் எல்லாம்
அடங்க மறுத்து ஆடுதிங்கே….
நீ திட்டி சென்ற வார்த்தை கூட
கவிதையாகி போகுதிங்கே……….
பேசிக்கொண்டே கண்னடிப்பாய்
கெட்ட எண்னம் தோன்றும் அப்போ….
தேக்கி வைத்த ஆசை-யெல்லாம்
நிறை வேறும் காலம் எப்போ…..??
முட்ட முட்ட முழித்துக்கொண்டே
உன்னை நினைத்த இரவு எல்லாம்……..
கட்டிகொண்டு நித்தம் துங்க
நேரம் தேடி காத்திருக்கு……….
கனவில் செய்த சேட்டைகள் போதும்
நேரில் சீக்கிரம் வந்து சேரடி
உலகில் யாவும் பொய்த்த போதிலும்
நம் காதல் மட்டும் வாழும் பாரடி………….
Hlo அப்டியே கமெண்ட் பண்னிட்டு போங்க…………………plzzzzzzz