நட்பு

சுட்டி காட்டுவதும்
தட்டி கொடுப்பதும்
தடுத்தாட்கொள்வதும் - நட்பு
கவலைகள் நிறைந்தாலும்
எதிரிகள் சேர்ந்தாலும்
முடிவே என்றாலும்
முறிந்துவிடாதது - நட்பு
வெட்டிய இடம்
பாயும் குருதி போல்
வாடிய நட்புக்கு உதவ
பாயும் நட்பு
வின்னவரும்
மன்னவரும்
கொண்டாடி மகிழும்- நட்பு
என்னை போல்
உன்னையும் நேசிப்பது- நட்பு
சொந்தங்கள் பிரிந்தாலும்
பந்தங்கள் பிரிவதில்லை
நட்பென்னும் பந்தம் பிரிவதில்லை
நண்பா நம் பந்தம் பிரிவதற்கில்லை...