பேரழகன்

யார் இந்த கண்ணா? யார் இந்த கண்ணா?
மாயங்கள் செய்யும் மாயக்கண்ணா
கன்னக்குழி அழகன்தான்
கட்டி இழுக்கும் குமரந்தான்

யார் இந்த கண்ணா? யார் இந்த கண்ணா?
மாயங்கள் செய்யும் மாயக்கண்ணா!!
மீசை முறுக்கு அழகன்!
காதல் கிறுக்கு அழகன்!

பொய்யா முறைகையில் அழகு தான்!
மெய்யா சிரிக்கையில் அழகு தான்!
எல்லா பையனும் அழகு தான்..
பையனாலே அழகு தான்!!

கோவத்தில் அன்ப கொட்டுறவன்..
கோடையில் மண்ணு சட்டியவன் ..
சோகத்துல தாங்கி நிக்குறவன்..
நேரத்துல அப்பனா மாறுறவன்..

ஓர கண்ணில் பார்க்கையில்
உசுர கொண்டு போகிறவன்..
நேரக்கொஞ்சம் பார்க்கையில்
நெஞ்ச நாசம் செஞ்சி போகுறவன்..

யார் இந்த கண்ணா? யார் இந்த கண்ணா?
மாயங்கள் செய்யும் மாயக்கண்ணா
பொறுமையில பூவழகன்..
கருமையில செந்ததமிழன்..
திறமையில் கவியதலைவன்..

சம்சாரம் ஆக்குறவன்
சமரசம் கொடுக்குறவன்
சாக்கு போக்கின் தொடக்கம் அவன்.

தலைய கொஞ்சம் கோதையில
வெட்க பட்டு சிரிக்கையில
நெத்தி பொட்டு வைகையில
நங்கை கைய பிடிக்கையில...


எல்லா ஆணும் அழகு தான்..
ஆள விழுங்கும் அருவிதான்!!

எழுதியவர் : (31-Mar-17, 3:02 pm)
சேர்த்தது : வைஷ்ணவி
பார்வை : 184

மேலே