நான் தனிமையில் நடக்கிறேன்

ஓயாத கடல் அலைகள்
நாம் கடலோரத்தில் கைகோர்த்து நடக்கும் போது
தாவி வந்து கால்களை முத்தமிட்டு முத்தமிட்டுச் செல்லும்
இன்று நான் தனிமையில் நடக்கிறேன்
அந்த உறவின் உணர்வும் பிரிவின் துயரும்
புரிந்ததால் என்னவோ
எனது கால்களை சோகத்தில் தழுவிச் செல்கின்றன அலைகள் !
-----கவின் சாரலன்