தனிமையின் நினைவுகள்

கால்தடம் பதிந்த
இடத்திலெல்லாம்
நம் பெயரை
எழுதி வைத்தேன்......

கை கோர்த்த
இடத்திலெல்லாம்
நம் நினைவுகளை
விதைத்து விட்டேன்.....

கதை பேசி அமர்ந்த இடத்திலெல்லாம்
நம் கனவுகளை
தொலைத்து விட்டேன்.....

நாம் என்ற சொல்லை
உணரும் முன்னரே
நான் என்ற சொல்லாய்
பிரிந்து விட்டேன்......

பிரிந்த பின்பு
பொருள் இல்லாமல்
தனித்து நிற்கிறேன்.....

எழுதியவர் : விஜிவிஜயன் (1-Apr-17, 8:22 pm)
பார்வை : 401

மேலே