எதிர்ப்பு
காதலில் நீ விழுந்தால்
கண்ணீருக்கு பஞ்சம் வரும்
கடல் முழுவதும் உன் கண்ணில்
அடங்கும்..,
உன் திறமையும்,அறிவும் அந்த
கல்லறையில் உறங்கும்..,
கனவுலகம் சொர்க்கமாகும்,
நிஜவுலகம் நரகமாகும்,
நினைவுகளினால் நிஜம் மறப்பாய்
காதலினால், கண்ணீர் வடிப்பாய்..,
ஒரு நாள் உண்மை உணர்வாய்
காதல் தோல்வியால் கவிதையும் எழுதுவாய்..,