நெஞ்சில் உன் நினைவின் நித்தியப் பூக்கள்
வளைந்து நெளிந்து செல்லும்
நதியைப் பார்க்கும் போது
நெஞ்சில் உன் நினைவலைகள் !
வளைந்து சாய்ந்து நிற்கும்
கொடி மலரைப் பார்க்கும் போது
நெஞ்சில் உன் நினைவின் நித்தியப் பூக்கள் !
வளைந்தாடும் தென்னையின்
கீற்றினைப் பார்க்கும் போது
நெஞ்சில் வந்து விழும் உன் தென்றல் கடிதம் !
வளையோசை கையில் குலுங்க
கொலுசோசையில் நீ நடந்து வரும் பாதை பார்த்து
காத்திருக்குது இந்தக் காதல் நெஞ்சு !
----கவின் சாரலன்