நிலவோடு தான் நான் தேய்கிறேன்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவோடு தான் நான் தேய்கிறேன் - உன்
நினைவோடு தான் நான் வாழ்கிறேன்
உனக்காக தான் உயிர் வாழ்கிறேன் - உன்னை
உயிராக தான் நான் பார்க்கிறேன்
பிரிந்தாலும் நானுன்னை மறவேனம்மா - அது
தெரிந்தும் நீயென்னை வதைக்காதம்மா
கண்மூடிப் பார்த்தாலும் நீதானம்மா - என்
கண் சிந்தும் கண்ணீரைத் துடைப்பாயம்மா
நீ இருந்தாலே என் தேகம் சிலிர்க்கின்றது
நீ பிரிந்தாலே என் கண்கள் சிவக்கின்றது
உன்னைக் காண என் நெஞ்சம் துடிக்கின்றது
உன் இடம் தேடி என் கால்கள் நடக்கின்றது
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்