விழி வலி துளி

விழியும் இமையுமாக இருந்தோம் அன்று
விதியின் விளையாட்டால் பிரிந்தோம் இன்று
தனிமையில் கொடுமையை அனுபவித்து என்மனம்
தனியே தவிக்கிறது இங்கு

தண்ணீர் தனலாய் எரிகிறது -உன்பிரிவால்
கண்ணீர் கடலாய் நிறைகிறது - காதலின்
நினைவுகள் மட்டும் துணையிருக்க அன்பே
விழியின் வலிகளுடன் நான்

காலையில் தோன்றும் கதிரவன் ஒளிவீசி
மாலையில் வானில் மறையும் - அழகான
உந்தன் நினைவுகள் மட்டும் மறையாமல்
என்றும் மனதில் இருக்கு

விழியின் வலியை அறிந்து உந்தன்
விழியால் வலியை விலக்கு - அன்பே
உறவாய் வருவாய் கனிவாய் மொழிவாய்
உயிராய் இருப்பாய் எனக்கு

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (15-Apr-17, 4:51 pm)
பார்வை : 1008

மேலே