வழி பயணம்

'' வழி பயணம் ''

எதிர்பாக்கவில்லை
உன் உறவை ...!

ஏன் வந்தாய் ..?
எதற்கு வந்தாய் ..?
தெரியாது ...?

கேட்கவும் விருப்பம்
இல்லை ....!

காரணம் நீ கூறிய
உறவு நட்பு....!

உலகிலேயே காரணம் இல்லாமல்
வருவது ,
நட்பு மட்டுமே....? ..!

இனிமையான நட்பை
உணர்த்தவே
பார்க்கும்போதெல்லாம்
இனிப்பை தந்தாயோ ...?

இவை எதிர் பார்க்கவில்லை
வார்த்தைகளில் மட்டும்....?..!
இனி எதிர்பார்க்கிறேன்
நம் வாழ்க்கையிலும் ...!

உன்னிடம்
இன்பத்தை மட்டும் பகிர முடிந்த
என்னால். (?)... துன்பத்தை
பகிர முடியவில்லை ...
விருப்பம் இல்லை ...!

பூத்த புன்னகையுடன்
பரிகசித்த உன்னிடம் ...

வாடிய மலராக
வர்ணமிட
விருப்பம் இல்லை...!

வழி பயணத்தில் வந்த
வான் நட்பே ..
வாழ்க்கை முழுதும்
வருவாயா ....(?)...!!

வர்ணங்கள் வாடினாலும்
வார்த்தைகள் வடிந்தாலும்
வழி மீது வார்த்திருப்பேன்
உன் நட்பிற்காக ....!!

வினோ வி .....

எழுதியவர் : வினோ வி (15-Apr-17, 8:22 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : vazhi payanam
பார்வை : 450

மேலே