எதற்க்காக இப்படி சொல்லி விட்டு போனாள் அவள்
![](https://eluthu.com/images/loading.gif)
மொட்டை மாடி
நிசப்தமான இரவு
நித்திரை இன்றி நான்
நிலவின் வெளிச்சம் வேறு
உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்- என்
அலைபேசியில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது !
இந்நேரம் அவள் உறங்கி இருப்பாளா ?
என்னை நினைத்துக்கொண்டே விழித்து இருப்பாளா ?
"ஒய் "லூசு " தூங்காம என்ன டா பண்ற இங்க " ?
எவ்வளவு மகிழ்வு என் இதயத்தில் என சொல்ல இயலவில்லை எனக்கு
இருப்பினும் மௌனத்தை என் இதயம் தாங்கி பிடித்துக்கொண்டே இருந்தது !
"நீ விவகாரமான ஆளு நான் கிளம்புறேன் பா "
எதற்க்காக இப்படி சொல்லிவிட்டு போனாள் அவள் !
போடி கிறுக்கி !