இரவல் தனிமை

ஒவ்வொரு தெருவிளக்கை கடக்கும் போதும்
ஒருவன் முன்னாள் கடந்துசெல்கிறான்.
பார்க்கும்போது மட்டும் தென்னை தோப்பில்
மறையும் - கண்சிமிட்டும் நட்சத்திரம்.
தார் சாலையின் இரு மருங்கும் - விடுதி
இரவு நாய்களுக்கு.
குறுக்கு சந்தில் துரத்தல் அதிகம்
பாதசாரிகளுக்கு.
மூதாதையருக்கு உதவிய ஊர்க்காட்டி,
நினைவாய்- சிதைந்தும் எடுக்கப்படாமல்.
சாலையில் பூமாலை, எதிரில் தீ தணிந்திருந்தது!
அதிகாலை போஸ்டர் ஓட்டும் கனவான்கள்,
நாய்களுக்கு சிநேகிதர்கள், ஆடுகளை வளர்ப்பவர்கள்,
சிமெண்ட் சாலையை பெயர்தெடுக்கும் அரச மரங்கள்,
வேடிக்கை பார்க்கும் இயந்திரம்.

எழுதியவர் : பூபாலன் (25-Apr-17, 9:39 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : iraval thanimai
பார்வை : 153

மேலே