அவன் நல்லவன்தானே
................................................................................................
அவன் நல்லவன்தானே?
அழகா இருக்கே என்றான்...
அவன் நல்லவன்தானே?
பூப்போலப் பேசுகிறான்
அவன் நல்லவன்தானே?
குறுஞ்செய்தி அனுப்புகிறான்..
அவன் நல்லவன்தானே?
பூங்காவுக்கு அழைக்கிறான்
அவன் நல்லவன்தானே?
இரவெல்லாம் அலைபேசுகிறான்
அவன் நல்லவன்தானே?
பரிசுமழை பொழிகிறான்
அவன் நல்லவன்தானே?
கைப்பட ஏங்குகிறான்
அவன் நல்லவன்தானே?
தேகத்தை யாசிக்கிறான்..
அவன் நல்லவன்தானே?
அண்ணனைக் காட்ட, ஓடிவிட்டான்..
அவன் நல்லவன்தானே?