இந்த கனவு பலிக்குமா
கற்பனை செய்த காதலி
கிடைத்துவிட்டாள்
இனி நமக்கேது கவலை
என்று எண்ணியதும்
என் கண்கள் திறந்தன
என் கற்பனையும்
என் காதலியும் நான் கண்ட
பகர்க் கனவு
கண் விழித்து பார்த்தேன்
வீட்டு வாசல் முன்னே
கனைத்து கொண்டு போனது
ஒரு கழுதை
அப்போது உள் மனம்
சொல்லியது "பகர்க் கணவாயினும்
கழுதை கனைத்தது ஓர் நல்ல
சகுனம் "மனமே, ஆதலால்
கனவில் வந்த காரிகை
காதலியாய் உன்முன்
விரைவில் வந்திடலாம் என்று;
இதோ இப்போதே புறப்பட்டுவிட்டேன்
அந்த கன்னிகையைத் தேடி
கழுதையை நம்பி!