தேவதையே வா வா
இமைகள் நான்கும் பேசிக்கொள்ளாதோ
காதல் அள்ளி பூசிக்கொள்ளாதோ
என் சுவாசம் உன் சுவாசம்
ரெண்டும் ஒன்றாய் ஆகாதோ
தேவதை உன் பாதம் பட்டாலே
பூமியெங்கும் காதல் சித்திரமே
நம் காதல் ஒன்றாய் கலந்து புதுகாவியம் படைத்திடுமே
கார்மேகம் உந்தன் கண்பட்டு
முத்தமழை ஒன்று பொழியாதா
நம் பார்வை ரெண்டும் மோதி
காதல் மின்னல் தோன்றாதா...
சித்திரமே எந்தன் பக்கம் வா
நித்திரையை கலைத்து விட வா
என் நிகழ்காலம் எதிர்காலம்
எல்லாம் நீயே கண்மணியே...