இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மகனே

மகனே
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .....

வெறும் வாழ்த்து மட்டும் தான்
எதுவும் கிடையாது சாரு

பொய் சொல்ற சித்தி

ஹா ஹா .....

சாரு
ம்ம் சொல்லாத ...

என்ன பண்ற சித்தி
இங்கே கிட்ட வா கிருத்திக்

ஹா ஹா
சித்தி .....
மகனை தூக்கி உச்சி முகர்கிறேன்
கீழே இறக்கி விட்டு ஓடி விளையாடுகிறோம்
விளையாடி முடித்து
என் மடியில் அமர்ந்து
என் கன்னத்தில் முத்தம் இடுகிறான் மகன்



௦௭.௦௫.௨௦௧௦ (07 . 05 .2010 )
உன்னை முதல் முதலாக பார்த்த அந்த நிமிடம்
நினைவில் நீங்காதது .....
உன்னை முதல் தடவை தூக்கிய அந்த தருணத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது மகனே .....

நீ கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்
வாயில் வந்ததை உளறி விட்டதும் ....
உன்னோடு குழந்தையாக மாறி விட்டதும் .....
துரு துருவென்று நீ செய்யும் செயல்கள்
உந்தன் சிரிப்பு உந்தன் கலாய்
நீயும் உன் அண்ணனும் நகைச்சுவை செய்து விளையாடும் ஆட்டம் பாட்டம்
ஒளிந்து விளையாடி பின்னால் இருந்து கத்தி பின் சிரிப்பாய்
இவை எல்லாம் அழகானது கிருத்திக்.....

தமிழ் போல் வாழ் என் மகனே .....
பதினாறும் பெற்று இப்படியே எல்லோரையும் சிரிப்பூட்டி சந்தோசமாய் வாழ் வாங்கு வாழ்வாய் என் மகனே .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-May-17, 7:31 pm)
பார்வை : 10452

மேலே