அம்மா
தட்டுத் தடுமாறும்
பிள்ளைப் பருவத்தில்
விட்டு விலகாத
உண்மை உறவு நீதானே...
வார்த்தைகளில் சொல்லிவிட
நீ ஒன்றும்
உதறிவிடும் உறவு இல்லையே!
அன்னையே....
பெண்மையின் நிழல்தனை
உருக்கி நிஜத்தினை
உணரச்செய்தவளே!!!
உன்னை
நினைக்காத நாள் இல்லை...
என் நெஞ்சினில்
தவளாத இடம் இல்லையே!!!!