வாழ்க்கை வியாபாரம்
======================
ஒரு தட்டில் பாவம்.
மறுதட்டில் பிரார்த்தனை.
நிறுத்துப் பார்க்கும் கடவுளின் தராசு
பாரம் குறைந்த பிரார்த்தனைத் தட்டில்
வலிகளை வைத்து சமன் செய்து
வாழ்க்கைப் பண்டத்தை
மரணத்தின் கூடையில் கொட்டிவிடுகிறது
*மெய்யன் நடராஜ்