கண்ணீர்

கண்ணீா்த் துளியை
வெற்றுத் திரவம் என்று
தீா்மானித்து விட முடியவில்லை......

ஒரு கண்ணீா்த் துளியை
அளந்து பாா்த்தேன்
பிரபஞ்சத்தை விடப்
பொியதாக இருந்தது
பிளந்து பாா்த்தேன்
பூகம்பத்தை விட
பேரதிா்வாக இருந்தது
நிறுத்துப் பாா்த்தேன்
பேரண்டத்தைவிடவும்
எடைகூடியதாகவே இருந்தது
உடைத்துப் பாா்த்தேன்
உள்ளே உயிா் இருந்தது
நுகா்ந்து பாா்த்தேன்
அடிமை வாசனை இருந்தது
சுவைத்துப் பாா்த்தேன்
அமிலத்தின் அவஸ்தை இருந்தது
உற்றுப் பாா்த்தேன்
உருகும் மெழுகுவா்த்தியின்
மென்மை இருந்தது
தீண்டிப் பாா்த்தேன்
கொந்தளிக்கும் எாிமலைக்
குழம்பின் குமிழ்கள் இருந்தன
ஒளியுடனும் அனலுடனும் .......

வெற்றுத் திரவம் என்று
எப்படிச் சொல்வது ......!!!!!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-May-17, 7:34 am)
Tanglish : kanneer
பார்வை : 857

மேலே