அரபுநாட்டு வைனா

அடி வாடி என் கண்ணு
என் அத்தை
பெத்த பொண்ணு
நீ ஆயிரத்திலே ஒன்னு
உன் கழுத்திலே நான்
கட்டடுமா ஒஸ்தி வகை பொன்னு...

ஒத்தையடி பாதை
உன் கண்ணப்பாத்த போதை
நான் படிக்காத மேதை
நீ அழகிய வாதை
அடி வாடி நீதான் இந்த
ராமனுக்கேத்த சீதை...

மொட்டுல சிறந்த மொட்டு
உன் காதோர ரோஜாமொட்டு
மெட்டுல சிறந்த மெட்டு
இந்த ராசா போட்ட காதல் மெட்டு
பொட்டுல சிறந்த பொட்டு
இந்த மாமன் வைச்ச குங்கும பொட்டு...

ரவிக்கை போட்ட மயிலு
நீ கெழக்கே பொகும் ரயிலு
என்னை தவிக்கவிட்ட குயிலு
சொல்லிதாரேன் காதல் பாடம்
நீ ஆத்தோரமா வந்து பயிலு...

சீவி சிங்காரிச்ச மைனா
என் மாமதான்டி உன் நைனா
நீ என்ன அரபுநாட்டு வைனா
இல்ல காதல் தேசத்து குய்னா...

அடி வாடி என் கண்ணு
என் அத்தை பெத்த பொண்ணு...

எழுதியவர் : செல்வமுத்து.M (9-May-17, 10:32 pm)
பார்வை : 168

மேலே