தடைகள்

தூக்கம் தொலைத்து
திரைசீலை அகற்றி
ஜன்னலோரம் நின்று
இருளை வெறித்து
பார்த்து கொண்டிருந்தேன்

இருளை கிழித்தெறிந்துவிட்டு
சென்ற ஊர்தியின் வெளிச்சம்
என்னிடம் சொல்லாமல்
சொல்லி போனது

தடைகள் ம்ம்ம்
அந்த தடைகள்
வெற்றியை தாமதப்படுத்தலாம்
வலிகளை தாரைவார்க்கலாம்
அதற்குள் அமிழ்ந்து
அழிந்துபோகாமல் அடுத்த
ஆரம்பங்களுக்கு ஆயத்தமானால்
ஆரத்தி எடுக்கும்
வெற்றி உனக்கு

எழுதியவர் : யாழினி sdv (9-May-17, 11:06 pm)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : thadaikal
பார்வை : 128

மேலே