உன் நினைவு சாரல்கள்
நிற்காமல் சோவென
பெய்து கொண்டிருந்த
சாரல் மழையைப்
போல தான்
என் மனதோடு
தேங்கி கிடக்கும்
உன் நினைவுகள்
ஒரேடியாக பொழிந்து
தீர்த்து விடாதா என்ற
நினைப்பை தருவதுபோல்
ஒரேடியாக அழுதும்
தீர்த்துவிட முடியவில்லை
என் வலிகளை
ஒரேடியாக அழித்தும்
மறக்க முடியவில்லை
உன் நினைவுகளை