ஒதுங்கி இருப்பதும் ஒருவழி

​நதிக்கரை ஓரம் நின்றிடும் மாட்சி
தனியொரு படகின் இனிய காட்சி
விழியும் குளிர்ந்து நீரும் நிறையுது
இதயத்து வலியும் சற்றே குறையுது !

அமைதி பிறந்து ஆறுதல் அடையுது
ஆறாத காயம் மாயமாய் மறையுது !
சூழல் ஒன்றே மனதையும் தேற்றுது
சூடான நெஞ்சை பனியாய் மாற்றுது !

காலம் கடந்தால் துயரங்கள் தேயுமென
ஞாலம் அறிந்த நடைமுறைத் தத்துவம் !
ஒதுங்கி இருப்பதும் ஒருவழி தீர்வென
ஓங்கி ஒலிப்பதும் செய்முறை வழக்கம் !

விலகி நிற்பதும் மாற்று வழியென்பது
விளங்கிப் போனது முடிந்த நிகழ்வால் !
புரியும் சிலருக்கு புரியாது பலருக்கும்
அறிந்த நெஞ்சங்கள் ஆறுதல் கூறினர் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-May-17, 7:39 am)
பார்வை : 741

மேலே