வெறுமை போக்க வா இனிமை சேர்க்க நீ வா

கருமைக் கண்ணழகி கனிவான சொல்லழகி
வறுமை இடையழகி வடிவான பல்லழகி
செம்மை இதழழகி செழிப்பான நடையழகி
தண்மை நிலவழகி தளிர்ந்த வயலழகி
சீர்மை உடல்தரித்த செங்கமலம் நீதானென்
வெறுமை உடன்போக்க மனம் நாடும் பெண்மை
இனிமை நிதம்சேர்க்க உடல் தேடும் மென்மை

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (17-May-17, 2:06 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 256

மேலே