மே திங்கள் 18----பாடல்----
பல்லவி :
நந்திக் கடல் அலையே
உன் நாதம் கேட்கிறதே...
நந்திக் கடல் அலையே
உன் நாதம் கேட்கிறதே...
தூங்கும் உயிர்களின் ஓலங்கள்...
தூங்கும் உயிர்களின் ஓலங்கள்
காதில் விழுகிறதே
கண்ணீரும் நெருப்பாய்த் தொடுகிறதே...
தாங்கும் வலிகளின் காயங்கள்...
தாங்கும் வலிகளின் காயங்கள்
கதறி அழுகிறதே
செந்நீரும் கொதித்துச் சுடுகிறதே...
நந்திக் கடல் அலையே......
சரணம் 1 :
நெஞ்சில் பாயும் குண்டுகள்
மூச்சை விழுங்கி சென்றதே
சிறுவன் உடம்பும்
மண்ணில் இரையாக ஆனதே...
மனிதமும் செத்துப் போனதே...
கைகள் இழந்தும் கால்கள் இழந்தும்
பிண மலைகள்
இரத்த வெள்ளத்தில் மிதந்ததே...
உரிமைப் போரில் அலறும் சத்தம்
உலகைப் பிளந்து ரெண்டாய் உடைக்கும்...
நினைத்துப் பார்த்தால்
அமிலம் கசிந்து மனதை உருக்கும்......
உரிமைப் போரில் அலறும் சத்தம்
உலகைப் பிளந்து ரெண்டாய் உடைக்கும்...
நினைத்துப் பார்த்தால்
அமிலம் கசிந்து மனதை உருக்கும்......
நந்திக் கடல் அலையே......
சரணம் 2 :
முல்லைத் தீவின் வெள்ளைப்
பூக்கள் கசங்கி அழிந்ததே
கருவின் உயிரும்
கண்கள் திறவாது போனதே...
கருணையும் கந்தல் ஆனதே...
உறவைத் தொலைத்தும் உணர்வைப் புதைத்தும்
சிறு விழிகள்
யுத்தக் களத்தில் அலைந்ததே...
எரியும் தீயில் கருகும் சொந்தம்
உயிரைக் குடைந்து உதிரம் வடிக்கும்...
நீனைத்துப் பார்த்தால்
இதயம் கனத்து உடனே வெடிக்கும்......
எரியும் தீயில் கருகும் சொந்தம்
உயிரைக் குடைந்து உதிரம் வடிக்கும்...
நீனைத்துப் பார்த்தால்
இதயம் கனத்து உடனே வெடிக்கும்......
நந்திக் கடல் அலையே......